தமிழக மாணவர்களே., விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமா? அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக மாணவர்களே., விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமா? அரசு அதிரடி அறிவிப்பு!!!
தமிழக மாணவர்களே., விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமா? அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு மையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த விடுதிகளில் அடுத்த 2023-24 ம் கல்வியாண்டில் சேர விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகளிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையங்களிலும் சேருவதற்கான தேர்வு போட்டிகள் மாவட்ட அளவில் வருகிற மே 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களில் உள்ள விளையாட்டரங்கில் நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.

உன் கூட வாழ இஷ்டம் இல்லை.., காவியாவை விவாகரத்து செய்யும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!!!

இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை மே 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு மே 24ம் தேதி காலை 7 மணி அளவில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறும். மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாநில அளவில் தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here