
நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினருடன் இணைந்து கொண்ட விரும்பி வருகின்றனர். இதனால், வெளியூரில் வசிப்பவர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்கள் என்பதால், தமிழக போக்குவரத்துத் துறையானது சில சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதாவது, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் வழக்கத்தை விட 600 சிறப்பு பேருந்துகள் இன்று (முதல்) அடுத்த 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

மேலும், வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிறகு, மறுநாள் நவம்பர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை திரும்பும் மக்களுக்காக செய்ய இந்த வசதியில், சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.