தமிழக தென் மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் whatsapp குழுக்களை கண்காணித்து, குற்றங்களை தடுக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் உத்தரவு:
முதல்வர் ஸ்டாலின் களப்பயணமாக தென் மாவட்டங்களுக்கு விசிட் அடித்துள்ளார். இதையடுத்து, மதுரை மண்டல சட்ட ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அதாவது, தென் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பராமரிப்பது காவல்துறைக்கு மிகப்பெரிய கடமையாக உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இங்குள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் whatsapp குழுக்களை கண்காணித்து சாதி, ரீதியான மோதல்கள் மற்றும் வன்முறை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தவறுகள் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்று தர வேண்டும் எனவும் பேசினார். இது மட்டும் இல்லாமல் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ரயில் பயணிகளே கவனம்., இது தெரியாம Trainல ஏறாதீங்க! மீறினால் ரூ.10,000 வரை Fine கன்பார்ம்!!
இது மட்டும் இல்லாமல் இங்குள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கூண்டோடு ஒழிக்க போராட வேண்டும் என உத்தரவிட்டார். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை பெயரளவில் மட்டும் வைத்திருக்காமல் தென் மாவட்ட அதிகாரிகள், இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தன் உரையில் குறிப்பிட்டார்.