மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!

0
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.., தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதிக் கட்ட தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த மாதத் தொடக்கத்திலேயே முடிவடைந்து விட்டன. இதனை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 28ம் தேதியுடன் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளும் முடிவடைய உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, ஏப்ரல் 29ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இந்த கோடை விடுமுறையானது, அடுத்த மே மாதம் முழுவதும் நீடித்த பிறகு, ஜூன் மாதம் 1 அல்லது 5 ம் தேதியில், அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.

நாளை மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கோடை விடுமுறைக்கு பிறகு, வெயிலின் தாக்கத்தை பொறுத்தே, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஜூன் 2ம் வாரத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here