தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச திட்டம்., ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் இன்று தொடக்கம்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச திட்டம்., ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் இன்று தொடக்கம்!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச திட்டம்., ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் இன்று தொடக்கம்!!

தமிழக மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்காக வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை ரூபாய் 25 கோடி நிதி பொருட்செலவில் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

முதல்வர் துவக்கம்:

தமிழக பள்ளி மாணவர்களுக்காக கடந்த சில நாட்களாக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப் பெண் போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் “வானவில் மன்றம்” என்ற சிறப்பு திட்டம் முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள 13,210 பள்ளிகளில் இந்த திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒரு பள்ளிக்கு ரூபாய் 1200 வீதம், 38 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு என ரூ` 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அரசு வழங்கியுள்ள உபகரணங்களை எடுத்துக்கொண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று சில அறிவியல் மாதிரிகளை செய்து காண்பிப்பார்கள். இதன் மூலம் மாணவர்களிடையே அறிவியல் செய்முறை குறித்த, ஆர்வம் மேம்படும்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(28.11.2022) – முழு விவரம் உள்ளே!!

இந்த விஞ்ஞான உலகில், மாணவர்களின் அறிவியல் சர்வதேச அளவில் உயர்த்துவதற்காக, தமிழக கல்வித்துறை இந்த சிறப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின், அறிவியல் அறிவு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என கல்வித்துறை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here