தமிழக பள்ளிகள் திறப்பை விட சிறப்பான செய்திகள்…, மாணவர்கள் முக்கியமாக தெரிஞ்சுக்க வேண்டியவை…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக பள்ளிகள் திறப்பை விட சிறப்பான செய்திகள்..., மாணவர்கள் முக்கியமாக தெரிஞ்சுக்க வேண்டியவை..., முழு விவரம் உள்ளே!!
தமிழக பள்ளிகள் திறப்பை விட சிறப்பான செய்திகள்..., மாணவர்கள் முக்கியமாக தெரிஞ்சுக்க வேண்டியவை..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் தொடங்க இருந்த புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி என தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். இதனால் மாணவர்களுக்கு பள்ளி திறப்பானது கூடுதலாக 10 நாட்கள் அதிகரித்து உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்ய உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது,

  • பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அமரும் இருக்கை, படிகள், கைப்பிடிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
  • கோடை விடுமுறை காலத்தில் வெளியூர் சென்ற மாணவர்களுக்காக, ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த போது ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் போக்குவரத்து துறையானது 1,300 பேருந்துகளும், சென்னையில் இருந்து 900 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என அறிவித்து இருந்தது.
  • தற்போது, ஜூன் 12 மற்றும் 14 ம் தேதிகளில் திறக்க இருப்பதால் ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், ஜூன் 9 ஆம் தேதி 3 மணி முதல் 4.30 வரை அரசு பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மை குழு கூட்டம்’ நடைபெற வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

SSC தேர்வில் முதுநிலை பட்டதாரிகள் மட்டுமே 55 லட்சம் பேர் விண்ணப்பம்? முழு விவரம் உள்ளே!!!

  • தற்போது, ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் ஜூன் 15 அல்லது 16ம் தேதிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்’ நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த கூட்டத்தின் மூலம், மாணவர்களின் இடைநிற்றல் குறித்த விவாதம் செய்யப்பட்டு, மீண்டும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழி வகை செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.
  • பள்ளிகள் ஜூன் 12ம் தேதி திறக்க உள்ளதால் இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் பாஸ் இல்லாமல் இருந்தாலும் சீருடை அணிந்து வந்தால் இலவசமாக பேருந்தில் பயணிக்க நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அவ்வாறு மாணவர்களை அனுமதிக்க வில்லை என்றால், நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
  • இது ஒரு புறம் இருக்க, மாணவர்களுக்கான நோட் புத்தகங்களின் கடந்த ஆண்டை விட 10 % அதிகரித்து உள்ளது. அதாவது, 400 பக்கங்கள் கொண்ட லாங் சைஸ் நோட்டு ரூ.200-லிருந்து ரூ.225 ரூபாய்க்கும், அனைத்து பாடத்திற்கும் உள்ள உரைநடை கைடு ரூ. 500-க்கு மேலாகவும் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here