தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – இனி வாரம் ஒருமுறை இது இருக்கும்., கல்வித்துறை சூப்பர் திட்டம்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - இனி வாரம் ஒருமுறை இது இருக்கும்., கல்வித்துறை சூப்பர் திட்டம்!!

தமிழக பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும்  விதமாக மாணவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை  கல்வித்துறை அமைச்சர் இன்று துவக்கி வைத்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழக பள்ளி மாணவர்களிடையே, வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய முன்னெடுப்பு ஒன்றை செய்துள்ளது. அதாவது, வாரம் ஒரு முறை நூலக பாட வேளை என்ற  வகுப்பின் மூலம் மாணவர்களுக்கு நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகத்தை வாசித்து, அதில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் சொந்தமாக தெரிவிக்கலாம்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த புத்தக வாசிப்பு குறித்த, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு 6-8, 9-10 மற்றும் 11-12 என்ற மூன்று பிரிவுகளில் இருந்து  மாவட்டத்திற்கு மூவர் விதம் 114 பேர் சென்னை அண்ணா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்க இருக்கும், முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பளிக்கப்படும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சியில் இன்று துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் மேம்படும் என கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி தற்போது, கல்வித்துறையின் செய்தி  குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here