இன்னும் எத்தனை திறமையை ஒளிச்சு வச்சுருக்கீங்க – விருமன் வெற்றி விழாவில் அதிதி செய்த காரியம்!

0

அண்மையில் வெளியான விருமன் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இதில் கலந்து கொண்ட அதிதி ஷங்கர் மற்றும் கார்த்தி ஆகியோர் கபடி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அதிதி ஷங்கர்:

முத்தையா – கார்த்தி காம்போ முதல் படத்திலேயே சக்ஸஸ் காம்போவாக அமைந்தது. அதாவது முத்தையா இயக்கி நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் கொம்பன். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் முத்தையா-கார்த்தி காம்போ விருமன் படத்தில் சேர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று முத்தையா இயக்கி கார்த்தி நடித்த விருமன் படம் வெளியான நிலையில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக புது முக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முதல் படத்திலே இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இதனை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விருமன் படத்தின் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அதிதி ஷங்கர் மற்றும் கார்த்தி ஆகியோர் கபடி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here