தமிழக பள்ளிகளில் மாற்றம் – இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!

0
தமிழகத்தில் மாணவர்கள் மீண்டும் ஆல் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
தமிழக பள்ளிகளில் மாற்றம் - இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில், புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக பணியிட மாறுதல் குறித்த முக்கிய அறிவிப்பை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அறிக்கை :

தமிழகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் குறித்த முக்கிய சுற்றறிக்கையை, கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 01.06.2022 அன்றைய நிலையில் கல்வித்துறை அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை, இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தி உடனே அவர்களை பணியிட மாறுதல் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வரும் வகையிலும், ஊழியர்கள் எந்தவித புகாரும் இன்றி புது உத்வேகத்துடன் செயல்பட தக்க வகையிலும் இந்த மாற்றங்களை கொண்டு வரப்படவுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை – ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! அரசுக்கு தொடரும் நெருக்கடி!!

இந்த கலந்தாய்வை உடனடியாக முடித்து, இதில் பங்கேற்காத ஊழியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து, இந்த இடம் மாறுதலுக்கு தகுதி உடையவராக இருந்தாலும் அவர்களுக்கான பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விலக்களிக்கப்படுவாதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கை, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here