தமிழக பள்ளி ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை – ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! அரசுக்கு தொடரும் நெருக்கடி!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை - ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! அரசுக்கு தொடரும் நெருக்கடி!!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை - ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! அரசுக்கு தொடரும் நெருக்கடி!!

தமிழகத்தில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தொடரும் இந்த நெருக்கடிகளால் அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடரும் சிக்கல்:

தமிழகத்தில் தற்போது 16, 000 க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ. 10,000 வரை தொகுப்பூதியத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்கள், சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது திமுக தேர்தல் அறிக்கையில், குறிப்பிட்டபடி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அதற்கான முக்கிய வரைமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார், தங்களுக்கும் மகப்பேறு, மருத்துவ மற்றும் தற்செயல் விடுப்புகள் போன்றவை வழங்க வேண்டும் எனவும், போனஸ், வைப்புத்தொகை, காப்பீடு தொகை போன்றவைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பள்ளிகளில் இதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!

இந்தப் பணியில் சேர்ந்த ஊழியர்களின் இறப்பு மற்றும் பணி ஓய்வு காரணமாக 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாகி விட்டது. இனியும் தாமதம் செய்யாமல் அரசு உடனடியாக, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே பழைய பென்ஷன் திட்டம், அகவிலைப்படி ஊதிய உயர்வு என அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் இந்த கோரிக்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here