தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் - இன்று முதல் கூடுதல் அரிசி விநியோகம்! மகிழ்ச்சியில் பயனர்கள்!!

தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள, 5000 ரேஷன் கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் வழங்கல் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஈரோடு மாவட்டம் அருகே உள்ள தனியார் அரிசி ஆலையை ஆய்வு செய்த, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டை குறித்து, முக்கிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள சுமார் 5 ஆயிரம் ரேஷன் கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில், இல்லாத வகையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக, கடந்த ஆட்சியில் 376 அரசு ஆலைகள் மட்டுமே இருந்தன. தற்போதைய ஆட்சி 199 புதிய அரிசி ஆலைகள் சேர்க்கப்பட்டு, நெல் அரவை செய்யப்படுகிறது. நெல் மூட்டைகள் திறந்த வெளியில் மழையில், நனைந்து பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here