ரேஷன்  கார்டு வச்சுக்க இது  ரொம்ப  முக்கியம், இல்லைனா ரத்து தான்.., மத்திய அரசு அறிவிப்பு!!

0

நாடு முழுவதும்,ரேஷன் கார்டு வைத்துக் கொள்ள அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி தகவல்:

நாடு முழுவதும் சுமார் 15 கோடி, மக்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இந்த மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது. தற்போது வரை இந்த திட்டம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும், தகுதியற்ற சில நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இனி நியாய விலைக் கடைகளில் புதிதாக ஒரு வசதி - தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

இதனால், சம்பந்தப்பட்டவர்கள் ரேஷன் கார்டை உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல், அவர்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - முக்கிய உணவு பொருள் விநியோகம் கட்! அரசு பகீர்!!

அதன்படி, இலவச ரேஷன் கார்டு குறித்த விதியின் அடிப்படையில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு அல்லது பிளாட், நான்கு சக்கர வாகனம், ஆயுத உரிமம், கிராமத்தில் ஆண்டு வருமானம் 2 லட்சம், நகரத்தில் 3 லட்சம் இது போன்ற பலன்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர். ஒருவேளை உங்களிடத்தில் ரேஷன் கார்டு இருந்தால் உடனடியாக தாலுகா ஆபீஸில் ஒப்படைக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் , இது குறித்த முறையான அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here