இந்திய அணியில் ஒரே நேரத்தில் களமிறங்கும் 2 விக்கெட் கீப்பர்கள்., சுனில் கவாஸ்கர் மாஸ்டர் பிளான்!!

0
இந்திய அணியில் ஒரே நேரத்தில் களமிறங்கும் 2 விக்கெட் கீப்பர்கள்., சுனில் கவாஸ்கர் மாஸ்டர் பிளான்!!
இந்திய அணியில் ஒரே நேரத்தில் களமிறங்கும் 2 விக்கெட் கீப்பர்கள்., சுனில் கவாஸ்கர் மாஸ்டர் பிளான்!!

உலக கோப்பை தொடருக்கான ப்ளேயிங் லெவனில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்களையும் ஒரே நேரத்தில் விளையாட வைப்பேன் என சுனில் கவாஸ்கர் கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுனில் கவாஸ்கர்!!

T20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்க உள்ளனர். இந்த 16 நாடுகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை BCCI நேற்று அறிவித்தது. இதில் பல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்களையும் பற்றி சுனில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இருவரையும் ஒரே போட்டியில் விளையாட வைக்க முடியாது என பலர் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர்,  ப்ளேயிங் லெவனில் இரண்டு விக்கெட் கீப்பர்களையும் ஒரே நேரத்தில் களமிறக்குவேன் என கூறியுள்ளார். அதாவது 5 வது இடத்தில் ரிஷப் பந்தும், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் தினேஷ் கார்த்திகையும் விளையாட வைப்பேன்.  இது கொஞ்சம் கடினமான முயற்சி தான்.

ஆனாலும் இது போன்ற முயற்சிகளை எடுத்தால் மட்டுமே உலக கோப்பையில் வெற்றி பெற முடியும் என கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் பந்து வீச்சாளர்களுக்கு சில ட்ரிக்ஸ்களை சொல்லியுள்ளார். அதாவது ஆசிய கோப்பையில் முடிந்தவரை விக்கெட் எடுக்க முடியவில்லை என்றாலும் எதிரணியை ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்துவதே ஒரு சிறந்த பந்து வீச்சாளருக்கு அழகு. இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறலாம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here