மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருக்கும் கோபி-ராதிகா ஜோடி.., பாக்கியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன??

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் கோபியை வர வைத்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு என சொல்லி கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்த முன்வந்துள்ளனர். இதையடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிரடி ட்விஸ்ட்:

பாக்கியலட்சுமி சீரியலில், பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பாக்கிய, எப்படியாவது உழைத்து முன்னேறி குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என வைராக்கியத்தில் உள்ளார். இதனால் கேட்டரிங் ஆர்டருக்காக காத்துகொண்டு உள்ளார். இந்நிலையில் தொழிலதிபர் ராஜசேகர்,எனக்கு ஒரு மினி பார்ட்டி ஹால் ஒண்ணு இருக்கு அங்க ஒரு 200, 300 பேர் வருவாங்க அதுக்கு முதலில் சமைச்சு காட்டுங்க. அதுக்கப்புறம் கேட்டரிங் பத்தி பார்க்கலாம் என பாக்கியாவிடம் சொல்கிறார்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு பாக்யா சந்தோஷத்துடன் கிளம்பிச் செல்கிறார். மற்றொரு பக்கம் கோபி, ராதிகா திருமணத்திற்கு ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. பிறகு கோபியும் ராதிகாவின் அண்ணனும் சேர்ந்து சென்று, தொழிலதிபர் ராஜசேகர் அவர்களின் மினி ஹாலை கல்யாணத்துக்காக புக் செய்கின்றனர். இதையடுத்து மேனேஜர் பாக்கியாவிற்கு போன் பண்ணி, உங்களுக்கு ஒரு கல்யாண ஆர்டர் கண்பார்ம் ஆகி இருக்கு என்று கூறி ராதிகா-கோபி திருமண கேட்டரிங் ஆர்டரை பாக்யாவுக்கு கொடுத்துவிட்டனர்.

பாக்கியவும் அதிக சந்தோசத்தில் உள்ளார். இதையடுத்து வரும் எபிசோடுகளில் கோபி- ராதிகாவின் திருமணம் முடிந்து விடும். தன் கணவர் திருமணம் என்று தெரியாமல் பாக்கியவும் திருமணத்திற்கு சமைத்து விடுகிறார். இதையடுத்து கோபியையும், ராதிகாவையும் திருமணம் கோலத்தில் பார்த்து, பாக்கியா என்ன செய்வார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். மேலும் என்ன நடக்க போகும் என்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here