காவல் நிலைய விசாரணையில் உயிரிழப்போருக்கான இழப்பீடு ரூ.7 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி!!

0
காவல் நிலைய விசாரணையில் உயிரிழப்போருக்கான இழப்பீடு ரூ.7 லட்சமாக உயர்வு.,அரசு அதிரடி!!
காவல் நிலைய விசாரணையில் உயிரிழப்போருக்கான இழப்பீடு ரூ.7 லட்சமாக உயர்வு.,அரசு அதிரடி!!

காவல் நிலையத்தில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு :

தமிழகத்தில், காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படுவதற்காக சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படும் நபர்கள், போலீஸின் தவறான அணுகுமுறைகள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. விசாரணை குறித்த போதிய அனுபவம் இல்லாத காவலர்கள் நடந்து கொள்ளும் மூர்க்கத்தனமான முறையில் உயிரிழப்போருக்கு அரசின் சார்பாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது, சம்பந்தப்பட்ட இந்த நபர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் உயர்த்துவதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் காவலர்களின், துன்புறுத்தலுக்கு ஆளான நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூபாய் 1 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

காவல்துறை டார்ச்சர் தாங்காமல் லாக்கப்பில் தற்கொலை செய்து கொள்பவர்கள், காவல் நிலையம் இல்லாமல் வேறு இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதால் இறந்து போபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here