ஒரு கோல் வித்தியாசத்தில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா…, FIH ப்ரோ லீக்கில் முன்னேற்றம்!!

0
ஒரு கோல் வித்தியாசத்தில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா..., FIH ப்ரோ லீக்கில் முன்னேற்றம்!!
ஒரு கோல் வித்தியாசத்தில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா..., FIH ப்ரோ லீக்கில் முன்னேற்றம்!!

FIH ப்ரோ லீக் தொடரில், ஜெர்மனி அணியை இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி உள்ளது.

FIH ப்ரோ லீக்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக ஆடவருக்கான FIH ப்ரோ லீக் தொடரின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா உள்ளிட்ட 9 அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், கடந்த மாதங்களில் உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வந்த இந்திய அணி மீண்டும் FIH ப்ரோ லீக் தொடரில் களமிறங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில் நேற்று இந்திய அணி, ஜெர்மனி அணிக்கு எதிராக இந்தியாவின் ரூர்கேலா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 30 வது நிமிடத்திலும் சுக்ஜீத் சிங் 32 மற்றும் 43 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இதனை தொடர்ந்து, ஜெர்மனியின் காஃப்மேன் 45 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.

தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் மந்தனாவின் RCB…, UP வாரியர்ஸிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ச்சி!!

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியின் 58 வது நிமிடத்தில் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்ட்ரூதாஃப் ஒரு கோல் அடித்தார். இதன் பிறகு, ஜெர்மனி அணி பல முறை கோல் அடிக்க முயற்சித்த போதும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 4 ல் வெற்றி 1ல் தோல்வி என 11 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here