பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 96.04% மாணவர்கள் தேர்ச்சி!!

0

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மொத்தமாக 96.04% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது சென்ற ஆண்டை விட 1% தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைவதற்கு முன்னதாகேவே 8.30 லட்சம் பிளஸ் 1 மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தால் 1 தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகளும் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 96.04% மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 98.10%, விருதுநகரில் 97.90%, கரூர் மாவட்டத்தில் 97.51% மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் உண்டு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.  இந்த முறையும் ஒட்டுமொத்தமாக மாணவர்களை விட மாணவிகளே 3.11% அதிகமாக தேர்ச்சி அடைந்து உள்ளனர். தமிழக அரசுப்பள்ளிகளில் 92.71% மாணவர்களும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 99.51% மாணவர்களும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அரசு உதவி பெரும் பள்ளிகளில் 96.51% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இந்த தேர்வு முடிவுகளுடன் சேர்த்து 12ம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட மறுதேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here