தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் பகீர்!!

0
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் பகீர்!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறிப்பிட்ட இந்த 6 மாவட்டங்களில் மட்டும் 3 மணி நேரத்திற்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆய்வு மையம் தகவல் :

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக, குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 9ஆம் தேதி வரை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை – இதை மீறினால் ரூ.20,000 அபராதம்! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

இதுபோக இன்று சேலம், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here