வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை – இதை மீறினால் ரூ.20,000 அபராதம்! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

0
வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை - இதை மீறினால் ரூ.20,000 அபராதம்! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

டெல்லியில் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் போக, டீசலால் இயங்கும் தடை செய்யப்பட்ட வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைந்தால் ரூபாய் 20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு அதிரடி:

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. 30% க்கும் மேல் சுண்ணாம்பு எரிப்பு காரணமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக அரசு அலுவலர்களில் 50% பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற, தொழில்துறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். தற்போது இந்த காற்று மாசை குறைக்க அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர, டீசலால் இயங்கும் வேறு எந்த வாகனங்களும் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – நீட் தேர்வுக்காக அரசின் அதிரடி ஆக்சன்! பெற்றோர் குஷி!!

அதை மீறி, உள்ளே நுழையும் வாகனங்களுக்கு ரூபாய் 20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோக மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கவும், காற்று தர மேலாண்மை ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை சில கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றவும் டெல்லி அரசு ஆயத்தமாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here