தமிழக மக்களே…, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தான் இது!!

0
தமிழக மக்களே..., புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தான் இது!!
தமிழக மக்களே..., புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தான் இது!!

தமிழக அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை பொது மக்கள் அனைவரும் பெற வேண்டுமானால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால், புதிதாக திருமணமானவர்கள் குறிப்பாக தாய்- தந்தை, மகன்-மருமகள் என ஒரே வீட்டில் இருப்பவர்கள் தனித்தனியாக புதிய ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் கூட்டுறவு துறையானது, விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தாய்- தந்தை, மகன்-மருமகள் என தனித்தனியாக 2 சிலிண்டர், 2 அடுப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உணவு வழங்கல் உதவி ஆணையர், மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதால் தான் புதிய ரேஷன் கார்டு வழங்க தாமதம் ஆகிறது என்று தெரிவித்துள்ளார். இவரது, இந்த கருத்துக்கு விண்ணப்பதாரர்கள் பலர், “அத்தியாவசிய உணவு பொருட்களை பெறுவதற்கான ரேஷன் கார்டுகளை வழங்குவதை இடை நிறுத்தக் கூடாது. இத்தகைய புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க, அரசு தெளிவான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிர் ரூ.1,000 உரிமை தொகை., தகுதியானவர்களின் பட்டியல் இந்த தேதியில் வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here