மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு – திருப்பூர் மாணவர் முதலிடம்!!

0

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைத்த காரணத்தால் இந்த கல்வியாண்டில் 405 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவ கலந்தாய்வு:

தமிழகத்தில் உள்ள 3,650 மருத்துவ இடங்களுக்கு 34,424 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதன்படி நேரடி கலந்தாய்வு வரும் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் எனும் மாணவர் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்ட மோகனப்பிரபா 702 மதிப்பெண்களுடன் 2வது இடமும், சென்னையை சேர்ந்த மாணவி சுவேதா 701 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 405 மாணவர்களுக்கு இம்முறை மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் ஜீவித்குமார் எனும் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here