தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் – மே 11ம் தேதி கூடுகிறது!!

0

தமிழகத்தில் தற்போது புதிய முதல்வராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது ஆட்சியில் தற்போது தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வருகிற மே மாதம் 11ம் தேதி கூடுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சியை கைபிடித்தது. மேலும் 75 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று ஸ்டாலின் தற்போது பல்வேறு கட்ட அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது என்று அனைவரும் வினவி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் ஸ்டாலின் ஆட்சியில் முதல் கூட்டத்தொடர் வருகிற மே மாதம் 11ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரவை தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘தயவுசெய்து தமிழக அரசுக்கு ஒத்துழைங்கள்’ – மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!!

இதன் காரணமாக புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்காலிக சபாநாயகராக ஜவாஹிருல்லா திகழ்வர் என்று தெரிவிக்கப்பட்டது. இவர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஆவார். இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தீர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here