‘தயவுசெய்து தமிழக அரசுக்கு ஒத்துழைங்கள்’ – மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!!

0

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் முழுமையாக கடைபிடிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கை:

தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் பல தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போதைய நிலை மோசமாக இருக்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வேறு நோய் பாதிப்பு இல்லாதவர்களுக்கு மிக அதிகமாக கொரோனா நோய் காணப்பட்டு வருகிறது. இதனை தடுப்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபோது அவர்கள் கூறியது முழுமையான ஊரடங்கு. தற்போது அதன் அடிப்படையில் தான் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்கள் அனைவரும் அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்த சங்கிலியை உடைக்க வேண்டும்.

தமிழகத்தில் மே10 முதல் கொரோனா நிவாரண தொகை – முதல் தவணையாக ரூ.2,000 வழங்கல்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எவருக்கேனும் சிறிய அறிகுறி இருந்தாலும் உடனே பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். மக்கள் அணைவரும் பாதுகாப்பாக வீட்டிலே இருங்கள். மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மேலும் தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பணிகள் அனைத்தும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அரசின் உத்தரவிற்கு கட்டுப்படுத்த நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here