பான் மசாலா, குட்காவுக்கான தடை ரத்து., உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!

0
பான் மசாலா, குட்காவுக்கான தடை ரத்து., உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!
பான் மசாலா, குட்காவுக்கான தடை ரத்து., உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!

பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த, தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.

மேல்முறையீடு மனு :

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு, உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் அடிப்படையில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக உணவுத்துறை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதுகுறித்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விஷயத்தில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி உயர் நீதிமன்றம், இந்த தடை உத்தரவை நீக்கியது. இதனால் மீண்டும், இந்த போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேதியில் டாஸ்மாக் கடை மூட ஆர்ப்பாட்டம்.., பரிதவிக்கும் மது பிரியர்கள்.., தமிழக அரசின் முடிவு?

இதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here