U19 T20i WC: 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து…, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய இளம் படை!!

0
U19 T20i WC: 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து..., இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய இளம் படை!!
U19 T20i WC: 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து..., இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய இளம் படை!!

மகளிருக்கான U19 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IND W vs NZ W:

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில், இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. இன்று நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி, பவர்பிளே முடிவிலேயே 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜார்ஜியா ப்ளிம்மர் (35), இசி காஸி (26) என சிறிது நேரம் நிலைத்து நிற்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய சார்பாக அதிகபட்சமாக பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

“உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு போணுமான விராட் நீங்க இத செஞ்சே ஆகணும்”…, கங்குலி பளிச் பேட்டி!!

எளிதில் அடையக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணியில், கேப்டன் ஷஃபாலி வர்மா 10 ரன்களில் வெளியேற, சௌமியா திவாரி (22) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, ஸ்வேதா செஹ்ராவத் (61*) அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here