தமிழகத்தில் இந்த அரசு மருத்துவர்களுக்கு ரூ.9,000 ஊக்கத்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த அரசு மருத்துவர்களுக்கு ரூ.9,000 ஊக்கத்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம், நேற்று (ஜன. 19) சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “அரசாணை 293 படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு ரூ.5,500 மற்றும் ரூ.9,000 என 2 வகையாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும், ஒரே மாதியாக, ரூ.9,000 ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.” என கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி.., இதை செய்யக்கூடாது.., தடை விதித்த மாநில அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here