தமிழக அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இது தான்…, முதல்வர் எடுக்கும் நடவடிக்கை என்ன??

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இது தான்..., முதல்வர் எடுக்கும் நடவடிக்கை என்ன??
தமிழக அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இது தான்..., முதல்வர் எடுக்கும் நடவடிக்கை என்ன??

தமிழக அரசானது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு என பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக நடைமுறையும் செய்து வருகிறது. இந்த வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக புதிய நலவாழ்வு காப்பீட்டு திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் 25% முதல் 40% வரை மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த மனுவில், “புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களான எம்.டி. இந்தியா, மெடி அசிஸ்ட் உள்ளிட்டவற்றுடன் தனி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், சிகிச்சை தொகை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு” கூறப்பட்டுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிப்பு.., சீன விஞ்ஞானிகள் குழு வெளியிட்ட முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here