Friday, April 26, 2024

ரேஷன் கடை ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு

Must Read

பூதாகரமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது

உரிய பாதுகாப்பு உள்ளதா என கண்காணிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு அரசு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவலிருந்து பாதுகாத்துக் கொள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும், ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறதா என்பதை, அக்கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறைச் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்து மாத்திரை மற்றும் இலவச பரிசோதனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க ZINC, VITAMIN போன்ற சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும், ‘அபராதத் தொகையை கட்ட உதவட்டுமா??’ என தி.மு.க. எம்.பி. ரஜினிகாந்திடம் நக்கல் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு இலவச பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு ஆணை

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வேண்டும் என்றும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொற்று பாதித்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று அப்பணியாளர்கள் சார்ந்துள்ள சங்க நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -