Thursday, April 25, 2024

‘அபராதத் தொகையை கட்ட உதவட்டுமா??’ என தி.மு.க. எம்.பி. ரஜினிகாந்திடம் நக்கல்

Must Read

சீட் பெல்ட் அணியாததால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத ரஜினிகாந்துக்கு, அபராதம் செலுத்த உதவுவதாக கிண்டலடித்துள்ளார், திமுக எம்.பி செந்தில்குமார்.

இபாஸ் வாங்கி சென்றாரா??

நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டும் புகைப்படம் மற்றும் தனது மகளை சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

கேளம்பாக்கம் என்ற ஊர் செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்டது என்பதால், ரஜினிகாந்த் இபாஸ் பெற்று சென்றாரா என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் இபாஸ் பெற்று தான் கேளம்பாக்கம் சென்றார் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த்துக்கு அபராதம்

மருத்துவ அவசரம் என்று காரணம் காட்டி ரஜினி இ பாஸ் பெற்றதும் மற்றும் இ பாஸ் பெற்ற தேதி முரணாக இருப்பதும் பல சந்தேகங்களை உருவாக்குகிறது. மேலும் இனோவா காருக்கு தான் இ பாஸ் வழங்கப்பட்டதாகவும், ஆனால் ரஜினிகாந்த் சென்றது பி.எம்.டபுள்யூ காரில் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையும் பாருங்க ⇒⇒ ‘ஆலியா பட் – ரன்பீர் கபூர் ரெடி’!!

அவ்வாறு செல்லும் பொழுது, சீட் பெல்ட் அணியாதாதால் ரஜினிகாந்த்துக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை ரஜினி கட்டாததால் அது நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்.பி செந்தில்குமாரின் நக்கல்

இந்த செய்தியை பார்த்த திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘QR கோடு சலான் அபராதம் ரூ. 100 நிலுவை என்று காட்டுகிறது. எங்கே செலுத்த வேண்டும் என்று கூறினால், அவரது ரசிகனாக அதனை செலுத்த உதவுவகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார்.

ரஜினி ரசிகர்களின் பதிலடி

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள், அபராதம் கட்டுவதற்கு 60 நாட்கள் கால அவசாசம் இருப்பது திமுக எம்.பிக்கே தெரியவில்லையா? உதயநிதியின் இ பாஸ் எங்கே?? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அபராதத் தொகையை இன்று செலுத்தி விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -