தமிழக மக்களே…, நிவாரணத் தொகையை பெற புதிய கட்டுப்பாடு…, கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக அரசானது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி, வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் இந்த நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ரேஷன் கடைகளில் தினமும் குறைந்தபட்சம் 100 அல்லது 150 பேருக்கு நிவாரணத் தொகை  வழங்க வேண்டும். ரேஷன் கார்டுதாரர்கள் எவ்வித சிரமமின்றி தொகை பெற்று செல்ல வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும், நிவாரணத் தொகை தொடர்பான புகார்கள் இருந்தால் தனி கட்டுப்பாட்டு மையம் அமைத்து அதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here