சட்டமன்ற தேர்தல் பணிக்காக காவல்துறை பார்வையாளர்கள் வருகை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!

0

தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்தலுக்காக வேட்புமனுவினை ஆன்லைன் முழங்க கூட சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக 118 செலவின பார்வையாளர்கள் தமிழகம் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2021

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் அல்லது மொத்தமாக 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான தீவிரமான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. கூடுதலாக, தேர்தல் ஆணையம் மூலமாக தேர்தல் நடவடிக்கைகளும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள மாட்டேன்’ – மணிமேகலை அதிர்ச்சி தகவல்!!

தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் பணிகளுக்காக பறக்கும் படையினர் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகன சோதனை போன்ற நடவடிக்கைகளும் பறக்கும் படையினர் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது, “தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமான பணிகளில் இறங்கிஉளள்து. தேர்தல் ஆணையம் சார்பாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. தற்போது வரை 65 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வந்துள்ளது”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“இது மட்டுமின்றி வரும் 19 ஆம் தேதி காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பத்தை பெறலாம். அதே போல் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும் செலுத்தலாம். ராகுல் காந்தி கல்லூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ததை குறித்த வழக்கு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here