இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிச்சயம் வழங்கப்படும் – அமைச்சர் உறுதி!!

0

ஏழ்மையான குடும்பங்கள் மட்டுமில்லாமல் தகுதி உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கபடுவதாக கூறிய வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என சட்ட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது, திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு உதவ கொரோனா நிவரான நிதி, நீட் தேர்வை ரத்து செய்வது, கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் என பல திட்டங்களை அறிவித்து இருந்தார்.

அதில் ஒரு திட்டம் தான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். இந்த திட்டம் தமிழக மக்களால் அதிக வரவேற்பை பெற்ற ஒன்று. தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

ஸ்டாலினை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள்

இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விகள் வலுவாக எழுந்துள்ளது. தற்போது அமைச்சர் சக்கரபாணி தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் முதல்வரால் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here