மஞ்சள் சேலை.., தலதலனு மல்லிகைப்பூ.., சேலையை எடுத்து சொருகி குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை!!

0

ரோஜா சீரியலில் நடித்து வரும் முக்கிய பிரபலமான பிரியங்கா தற்போது தெலுங்கு பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியல் தற்போது விறுவிறுப்பான பல முக்கிய கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதாவது அணு ரோஜாவை மாட்டி விட கோமாவில் இருப்பது போன்று நடிக்க அதனை நிரூபிப்பதற்காக அர்ஜுன் பாடுபட்டு வருகிறார். டைகர் மாணிக்கம் அணுவை தன் மகள் என்று தவறாக புரிந்துகொண்டு ரோஜாவை பழி வாங்கி வருகிறார்.

அணு அத்தனை சொத்தையும் தன் பெயரில் எழுதி வாங்குவதற்காக தான் இத்தனை வேலையும் பார்க்கிறார் என்று பல ஆதாரங்களை காட்டியும் டைகர் மாணிக்கம் நம்பவில்லை. அணு மேல் இருக்கும் குருட்டு நம்பிக்கையால் தான் ரோஜாவை தன் மகளாக ஏற்க மறுக்கிறார்.

இந்த சீரியல் சில தினங்களாக பல அட்வென்ச்சருடன் ஒளிபரப்பானது. அதாவது ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா கராத்தே எல்லாம் செய்து அசத்தினார். இவருக்கு இவ்வளவு திறமையா?? என்று பலரும் பாராட்டினார்கள். இந்த சீரியல் தான் ப்ரியங்காவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆரம்பத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் தான் பிரியங்கா.

தற்போது தமிழ் நாட்டில் நிலையான ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.  தற்போதெல்லாம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறார். இன்ஸ்டாவிலும் நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். தற்போது சேலை, மல்லிப்பூ வைத்து தெலுங்கு பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here