தமிழகத்தில் திமுக- பாஜக இடையிலான கூட்டணி மலர்கிறதா? முதல்வர் ஸ்டாலின் புதிய விளக்கம்!!

0
தமிழகத்தில் திமுக- பாஜக இடையிலான கூட்டணி மலர்கிறதா? முதல்வர் ஸ்டாலின் புதிய விளக்கம்!!

தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவாகிறதா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இந்த கேள்விக்கு முக்கிய பதில் ஒன்றை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்:

தமிழகத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் அண்மையில் துவங்கியது. இந்த நிகழ்வை துவக்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார்.

இது குறித்து நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி இடையே ஏற்பட்ட இணக்கம்  காரணமாக தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி மலர்கிறதா? என  பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது இது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தேர்தலின் போது இருந்த திமுக தலைமையிலான கூட்டணியே தொடரும் என்றும், இந்த கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்றும் கொள்கைக்கான கூட்டணி என்றும் பேசினார். இதையடுத்து, புதிய கூட்டணி குறித்த, வதந்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here