காவலர்களுக்கு ரு.5000 ஊக்கத்தொகை…கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் முதலவரின் அறிவிப்புகள்..!

0

கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று காவலர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை, கொரோனா நிவராண நிதியின் இரண்டாவது தவணை ரூ.2000 உட்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல்வரின் அறிவிப்புகள்:

  • தமிழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா காவலர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்பட உத்தரவு
  • கொரோனா பாதிப்பு நிவாரண நிதியுதவியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.8 கோடி பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம்

  • தமிழ்நாடு அரசு அறநிலைய துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டம்
  • திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டம்

  • மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்க உத்தரவு
  • திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள், உளர் களங்கள் அமைக்க உத்தரவு
  • தென் சென்னையில் 250 கோடி மதிப்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here