
சினிமாவில் நடிகையாக ஒரு சில படங்களில் நடித்து அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவறான தொழிலில் தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் அறிமுகம் இல்லாத ஆட்கள் அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது துணை நடிகை வைதேகி என்பவர் முன்னணி நடிகை மற்றும் துணை நடிகையை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி மப்டியில் சென்ற போலீஸிடம் முன்னணி நடிகை என்றால் ஒரு மணி நேரத்திற்கு 25 ஆயிரம் என்றும் துணை நடிகை என்றால் 10 ஆயிரம் என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்துள்ளது. மேலும் பட வாய்ப்பு இல்லாததால் முன்னணி நடிகைகளும் பாலியல் தொழில் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.