தமிழகத்தில் வார இறுதி, பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பகுதிகளில் செலவிடவே விரும்புகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் to ஊட்டி மலை ரயில் பயணம் மிகவும் சிறப்புமிக்கது. இங்கு விடுமுறை நாட்களில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மலை ரயில்களில் முன்பதிவுகள் விரைவாக தீர்ந்துவிடுவதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு செல்ல சிறப்பு மலை ரயில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.25 மணிக்கு ஊட்டி செல்லும். வருகிற செப்டம்பர் 16, 30ஆம் தேதி சனிக்கிழமைகளிலும் மற்றும் அக்டோபரில் 21, 23ஆம் தேதி ஆகிய 4 தினங்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.