அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்.. குஷியில் தமிழக மக்கள்!!!

0

தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 5, 2021) முதல் முதல் அறிவித்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கம்.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் பொது போக்குவரத்துக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மாவட்டங்களுக்குள்ளேயும், இடையேயும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவைகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக் கவசமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

அறிவிக்கப்பட்ட பிற தளர்வுகளின்படி, இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, மாநிலங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை,திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், அரசியல் சாா்ந்த கூட்டங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம்,  கலாசார நிகழ்வுகளுக்கு போடப்பட்ட தடை  தொடா்ந்து நீடிக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here