உலகின் ‘பணக்கார கடவுள்’ திருப்பதி.. கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு..ஆச்சரியத்தில் பக்தர்கள்!!

0
உலகின் 'பணக்கார கடவுள்’ திருப்பதி.. கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு..ஆச்சரியத்தில் பக்தர்கள்!!
உலகின் 'பணக்கார கடவுள்’ திருப்பதி.. கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு..ஆச்சரியத்தில் பக்தர்கள்!!

உலகின் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுபவர் திருப்பதி ஏழுமலையான் தான். அதை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு வெளியாகி பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

பணக்கார கடவுள்:

இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும் திருப்பதி கோவிலுக்கு உண்டியல் காணிக்கை உள்பட பல்வேறு வருமானங்கள் வருகின்றன. இந்நிலையில் கோவிலின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து மதிப்பு முன்னணி IT நிறுவனமான விப்ரோ, நெஸ்லே நிறுவனம், அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் IOC ஆகியவற்றின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது.

எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்., இந்த நபர்களின் கணக்குகள் அதிரடி முடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதாவது விப்ரோவின் சொத்து மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி, உணவு & குளிர்பானம் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் சொத்து மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி ஆகும். மேலும் ONGC மற்றும் IOC எண்ணெய் நிறுவனங்களின் சொத்து மதிப்பு திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பை விட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here