எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்., இந்த நபர்களின் கணக்குகள் அதிரடி முடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்., இந்த நபர்களின் கணக்குகள் அதிரடி முடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்., இந்த நபர்களின் கணக்குகள் அதிரடி முடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், குறிப்பிட்ட சில செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கணக்குகள் முடக்கம் :

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, நீண்ட இழுபறிக்கு பின் எலான் மஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன் 3.62 லட்சம் கோடி கொடுத்து கைப்பற்றினார். இவர் கைக்கு இந்த அதிகாரம் வந்ததும், பல இந்தியர்கள் உட்பட நிறுவனத்தின் முக்கிய ஊழியர்களை பதவி நீக்கம் செய்தார். இதுபோக இந்த மாத இறுதியில், ட்விட்டரில் ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவரிடம் மாதந்தோறும் $8 வரை கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை, என்னவாக இருக்கும் என பலரும் யோசித்து வந்த நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி செயல்களில் ஈடுபடும் பிரபலங்கள் மற்றும் நபர்களின் கணக்குகள் அதிரடியாக முடக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அடுத்த கட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள்! கர்நாடகாவில் பரபரப்பு!!

இது மட்டுமல்லாமல், தனக்கும் தன் நிறுவனத்திற்கும் எதிராக கருத்து பதிவிட்ட சாரா சில்வர் மேன் மற்றும் ரிச் சோமர் போன்ற பிரபலங்களின் கணக்குகளை அதிரடியாக நீக்கினார். இதற்கு முன் இது போன்ற காரணங்களுக்காக, பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் பயனர்களின் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக, இனி இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here