தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை.., கிடுகிடுவென உயர்ந்த பேருந்து கட்டணம்!!!!

0
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை.., கிடுகிடுவென உயர்ந்த பேருந்து கட்டணம்!!!!
தமிழகம் முழுவதும் இப்போது அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது பள்ளிகள் அனைத்திற்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. அதாவது நாளை புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வார விடுமுறையும் உடன் வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சென்னை டூ மதுரைக்கு 5,000 ரூபாயும், சென்னை டூ கோவைக்கு 5,000 ரூபாயும், சென்னை டூ பெங்களூருவிற்கு 3,000 ரூபாயும், சென்னை டூ விஜயவாடாவுக்கு 2,200 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வழித்தடத்தில் 1000 முதல் 15,00 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here