“நம்ம நெல்லை” செல்பி பாய்ண்ட் உருவாக்கம் – 231-ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி திருநெல்வேலியில் துவக்கம்!

0

திருநெல்வேலி மாவட்டம் தொடங்கப்பட்டு 231 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக நம்ம நெல்லை என்ற  செல்பி பாய்ண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

நம்ம நெல்லை:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1790-ம் ஆண்டு திருநெல்வேலி, மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.  இதற்கு “குற்றால நகரம்” என்ற மற்றொரு பெயரும் உண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடமாகவும், மாவட்டத்தை பசுமையாக வைத்திருக்கும் காரணியாகவும் நெல்லை சீமை உள்ளது.  இது மட்டுமல்லாமல், கோயில்களின் நகரம் என்று பெருமைப்படும் அளவிற்கு பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோயில்களும் இங்கு உள்ளன.

இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே உள்ளடக்கிய நெல்லை சீமை பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் வீர வரலாற்றையும் சுமந்து நிற்கிறது.  வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போரின் தமிழ் மணத்தை இந்த மாவட்டம் பறை சாற்றி வருகிறது.  இந்த நிலையில் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டு 231 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.  இதை கொண்டாடும் விதமாக முக்கிய நினைவு பொருள் ஒன்று மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, “நம்ம நெல்லை”  என்ற  அடைமொழியுடன் கூடிய செல்பி பாய்ண்ட் ஒன்றை வண்ணாரப்பேட்டையில் அமைத்துள்ளனர்.  இந்த நினைவு சின்னத்தை மாநகர காவல் துணை ஆணையாளர் திறந்து வைத்தார்.  இதற்கு முன் இது போன்ற நினைவு சின்னங்கள் சென்னை மற்றும் கோவையில் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here