விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:பச்சை பாசிப்பயறு கொழுக்கட்டை.. வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!

0

வருகின்ற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளோம். அந்த நேரத்தில் விநாயகருக்கு பல வித கொழுக்கட்டைகளை படைத்து சாமி குமிப்பிடுவது வழக்கம். இந்நிலையில் நாம் இந்த பதிவில் அப்படி ஒரு சத்தான சுவையான பச்சை பாசி பயறு கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பதை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு – 1/4 கிலோ

சர்க்கரை – 1/4 கிலோ

தேங்காய் – 1 முடி

ஏலக்காய் தூள்  –  1/4 தேக்கரண்டி

கொழுக்கட்டை மாவு  – 1 பாக்கெட்

உப்பு – தேவையான அளவு

நெய் / எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சை பயிரை குலையாமல் நன்கு வேகவைத்து கொள்ளவும். அதன் பிறகு அந்த பயிரை தண்ணீர் போக வடிகட்டி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் இந்த பாசி பயிரை போட்டு லைட்டாக ஒன்றிரண்டாக மசித்து கொண்டு அதில் சீவிய சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும்  சீவிய தேங்காய் துண்டுகளை சேர்த்து கொள்ளவும். பிறகு மூன்றையும் ஓரளவிற்கு கெட்டியாகும் வரை நன்றாக கிளறி கொள்ளவும்.

அதன் பின்னர் தேவையான அளவு கொழுக்கட்டை மற்றும் உப்பு சேர்த்து இடியாப்பம் பதத்திற்கு கிளறி கொள்ளவும். அதன் பின்னர் ஒரு இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை பரத்தி கொள்ளவும். அதில் ஏற்கனவே சேர்த்து வைத்து புரணத்தை வைத்து கொழுக்கட்டை போன்று பிடித்து கொள்ளவும். அதன் பிறகு இட்லி கொப்பரையில் வைத்து வேக வைக்க வேண்டும். தற்போது பச்சை பாசிப்பயறு கொழுக்கட்டை ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here