சுவாமி ஸ்ரீலா பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாள்- ரூ.125 சிறப்பு நாணயத்தை வெளியிட்ட இந்திய பிரதமர்!!

0

பகவத் கீதை உரை உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களை எழுதிய பக்தி வேதாந்த அமைப்பின் தலைவரான சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்த நாளன்று ரூபாய் 125க்கான நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ரூ.125 சிறப்பு நாணயம்:

இஸ்கான் எனப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆச்சார்யர் ஏ.சி.பக்தி வேதாந்தா சுவாமி ஸ்ரீலா பிரபுபாதா. இவரின் 125-ம் ஆண்டு பிறந்த தினம் நேற்று (செப் 01) கொண்டாடப்பட்டது.  இவர் நவீனகால இந்திய ஆன்மிக கலாச்சாரம், தத்துவம் மற்றும் பாரம்பரியத்துக்கான சிறந்த தூதர் ஆவார். இவர் இந்தியாவின் அமைதி மற்றும் நல்லெண்ண செய்தியை மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்வதற்காக தனது 69-வது வயதிலும் கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றார்.

அவர் வயது, நாடு, மதம், பாலினம், சாதி, பேதம் பார்க்காமல் அனைவரையும் மேம்படுத்தும் பணியில் சிறப்பாக ஓய்வின்றி செயல்பட்டார். அவர் தலைசிறந்த தத்துவ அறிஞர், ஆன்மிகத் தலைவர், துறவி, சீர்திருத்தவாதி என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவரது போதனைகளால் கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பி அதனால் லட்சக்கணக்காண மக்கள் ஈர்க்கப்பட்டனர். மேலும்  கிருஷ்ணர் பிறந்த நாளிலேயே இவர் பிறந்திருப்பது ஆச்சரியமான நிகழ்வாகும்.

இந்நிலையில் பிரபுபாதாவின் 125-வது பிறந்த நாள் விழாவை இணையவழியில் காணொலி மூலமாக நேற்று தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அவரது உருவம் பொறித்த 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை  நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் இஸ்கான் அமைப்பு துறவிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி தியானம் மற்றும் பக்கத்தியை கொண்டாடும் நாள் இது என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here