தமிழகத்தின் இந்த கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் – 22 லட்சம் பேருக்கு வழங்க முடிவு!!

0
தமிழகத்தின் இந்த கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் - 22 லட்சம் பேருக்கு வழங்க முடிவு!!
தமிழகத்தின் இந்த கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் - 22 லட்சம் பேருக்கு வழங்க முடிவு!!

ஆண்டுதோறும் பக்தர்கள் படைசூழ திருவண்ணாமலையில் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால், கடந்த இரண்டு வருடம் கொரோனா தொற்று அச்சத்தில் மக்கள் பங்கேற்காமல் திருவிழா நடந்தது. ஆனால் தற்போது தடைகள் இன்றி அருணாசலேஸ்வரரின் தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் தமிழக அரசு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 22 லட்சத்திற்கும் மேலான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த அன்னதானத்தில் பணிபுரிய கோவில் அருகில் 112 பேரும், கிரிவலம் வரும் பாதையில் பணிபுரிய 114 பேரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாரிசு திரைப்படம் தான் அதிக தியேட்டர்களில் ரிலீசாகிறதா?., தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!!

அதேபோல் அரசு நியமன ஆணை இல்லாமல் பக்தர்களுக்கு வேறு யாரும் அன்னதானம் வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் திருவிழா டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெறுவதால் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை CCTV மற்றும் ட்ரோன் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here