தில்லு இருந்தா போராடு திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் – அதுவும் அந்த கதாபாத்திரத்திலா?

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை வனிதா தற்போது தில்லு இருந்தா போராடு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக வனிதா, டான் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதா விஜயகுமார்:

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிகை வனிதா நடித்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் குக் வித் கோமாளி சீசன் 1 ல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசையும் பெற்றார்.

தற்போது வனிதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தபடியே உள்ளன. தற்போது இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடிகை வனிதா நடித்து கொண்டிருக்கிறார். திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரஷாந்த்துடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் பிக் அப் ட்ராப் என்னும் திரைப்படத்தில் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தற்போது தில்லு இருந்தா போராடு என்னும் திரைப்படத்தில் டான் கதாபாத்திரத்தில் வனிதா நடித்து கொண்டிருக்கிறாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here