மத்திய அரசில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

0

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, அவற்றில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து நிரப்புவார்கள் என தெரிவித்து உள்ளார். ராஜினாமா, மரணம், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி இடங்கள் உருவாகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here