தேன்மொழி BA சீரியல் நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி BA நிகழ்ச்சியில் ஜாக்குலின் அப்பாவாக நடிக்கும் குட்டி ரமேஷ் மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேன்மொழி நடிகர்

விஜய் டிவியில் ஜாக்குலின் நடிப்பில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தான் தேன்மொழி. அருளும் தேன்மொழியும் இணைவார்களா?? என்பது தான் கதையின் ட்விஸ்ட். ஆரம்பத்தில் அருளுக்கு தேன்மொழியை சுத்தமாக பிடிக்கவும் இல்லை. தேன்மொழி ஊராட்சி மன்ற தலைவர் என்ற காரணத்தால் அருளுக்கு திட்டமிட்டு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த உண்மை தெரிந்த தேன்மொழி வீட்டை வெளியேற அருளும் தேன்மொழியுடன் வந்து விட்டார். அருளுக்கு முழு சப்போர்ட்டாக இருப்பது எல்லாமே தேன்மொழி அப்பா தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் குட்டி ரமேஷ். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார்.

தற்போது சின்னத்திரையில் கால் பதித்த இவரின் இந்த மரணம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது சின்னத்திரை நடிகர்களின் மரணம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் திரையுலகம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here