டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 – திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??

0
டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 - திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??
டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 - திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??

டோக்கியோவில் நடந்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டி :

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்றிலிருந்து இந்தியாவானது பதக்கங்களை பெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெண்கலம் வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 - திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??
டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 – திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??

மூன்றாவதாக வினோத் குமார் (41) என்ற வீரர் F52 பிரிவில் வட்டு எறிதலில் வெண்கல பதக்கத்தை வென்றார். ஆனால் இந்திய வீரரான வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்க்கு காரணமாக அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதன் இறுதி முடிவு குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமார் வெண்கலம் தற்போது திரும்பப் பெறப்பட்டது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 - திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??
டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2021 – திரும்பிப்பெறப்பட்ட வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம்!! காரணம் இதுதானா??

F52 பிரிவு என்பது தசை பலவீனம், தடைசெய்யப்பட்ட இயக்கம், மூட்டு குறைபாடு அல்லது கால் நீளம் வேறுபாடு கொண்ட வீரர்களின் விளையாட்டு ஆகும். இது செர்விகல் கார்ட் காயம், முதுகெலும்பு காயம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறு ஆகியவற்றுக்கும் பொருந்தும். ஆனால் தற்போது இவர் இந்த பிரிவிக்கு தகுதியற்றவர் என்று கூறி பதக்கத்தினை பெற்றுக்கொண்டனர். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒன்று குறைந்திருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here