தன்னை அறியாமல் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் கோதை.., மீண்டும் பிரிக்க துடிக்கும் அர்ஜுன்.., தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியல் எப்படியோ எலக்க்ஷனில் அர்ஜுன் செய்த அனைத்து பித்தலாட்டங்களையும் முறியடித்து தமிழ் வெற்றி பெறுகிறார். ஆனால் இது கோதைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் அர்ஜுன் நடவடிக்கையில் இப்போது தான் கோதைக்கு சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. இதனால் நிச்சயம் கூடிய விரைவில் அர்ஜுன் செய்த அனைத்து சதி வேலைகளையும் கோதை கண்டுபிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது சந்திரகலா வீட்டில் விசேஷம் என்று அனைவரும் அங்கு வருகின்றனர். அப்போது தமிழும் கோதையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அந்த நேரத்தில் தமிழுக்கு இருமல் வர கோதை தன்னை அறியாமல் தாய் பாசத்தை வெளிப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் கோதை தடுமாறி விழ தமிழ் தாங்கிப் பிடிக்கிறார்.

IND VS WI டெஸ்ட்.., ஜொலிக்கப் போவது கோலியா? இல்ல ரோஹித்தா? வெற்றி கைகூடுமா!!!

இதுபோன்று உணர்ச்சி பூர்வமான தருணத்துடன் தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆனால் இதை பார்த்த அர்ஜுன் கடுப்பாகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது நிச்சயம் தமிழும், கோதையும் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அர்ஜுன் இதற்கு இடம் கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here